பொங்கும் பொழுது 04.07.2004 இல் பதில் அதிபரின் செய்தி
1909ம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச்சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் சிந்தனையின் தூண்டுகோலால் மானிப்பாயைச்சேர்ந்த செல்வந்தர் திரு.வேலாயுதம் சங்கரப்பிள்ளை அவர்களால் 04.07.1910 அன்று மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பின் பிரதான கட்டிடமான சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. அதற்காக அவர் வசித்த இருப்பிடத்தையும் பணவசதியையும் செய்துகொடுத்தார். அன்றிலிருந்து இக்கல்லூரி படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டுவருகிறது.
பின்பு 1923ம் ஆண்டு வாகீசர் பிரார்த்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்து. 02.06.1954இல் பெரிய நூலகமொன்று பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது. 1955ல் செல்லமுத்து கட்டிடமும் வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டது. 1965ல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயண ஆய்வுகூடமும் பௌதீகவியல் ஆய்வுகூடமும் அமைக்கப்பட்து. இதனையடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973ல் பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டிடமும் அமைக்கப்பட்டது. பின்பு 1980ல் வீரசிங்கம் நிர்வாக கட்டிடமும் 1982ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த தொழில்நுட்ப அலகும் 1983ல் மூன்று மாடி கட்டிடமான சாறி மண்டபமும் அமைக்கப்பட்டது.
12.03.2003 அன்று நவீன நூலகமொன்று கல்வி அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. நவீன கணனி கற்கை நிலயமும் (ஊழஅpரவநச டுநயசniபெ ஊநவெசந) மற்றும் செவிப்புல கட்புல நிலையமும் (யுரனழை ஏளைரயட ஊநவெசந) நிலையமும் 04.07.2004 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. அல்பேட் அதிசயரட்ணம் பேஜ் ஞாபகார்த்த விரிவுரைமண்டபக் கட்டிட வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது 712 மாணவர்களுடனும் 33 ஆசிரியர்களுடனும் , 02 தொண்டர் ஆசிரியர்களுடனும் 07 ஆசிரியர் அல்லாத அலுவலர்களுடனும் 1 ஏபி பாடசாலையாக சிறந்த பெறுபேறுகளைப்பெற்று மிளிர்கிறது. 2003 டிசம்பர் க.பொ.த (சா.த) பரீட்சையில் ஜெராசா றஜீவன் என்ற மாணவன் 10 ஏ பெற்று பாடசாலைக்கு பெருமைதேடித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr.K.Jeganathan
Acting Principal
MHC